விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல் 5 பேருக்கு வலைவீச்சு


விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல் 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Jan 2017 8:24 PM GMT (Updated: 5 Jan 2017 8:24 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 19). இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

திருவொற்றியூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 19). இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மின்சார ரெயிலில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்ற போது சரவணனை, மாநில கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் வெளியே இழுத்து போட்டு நடைமேடையில் வைத்து சரமாரியாக தாக்கினர். மேலும் பாட்டிலால் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த மாணவர் சரவணன், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தாக்கிய மாநில கல்லூரி மாணவர்கள் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story