ஆதம்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆதம்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 8:25 PM GMT (Updated: 5 Jan 2017 8:25 PM GMT)

மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். பகுதி தலைவர் நாஞ்சில் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். 

Next Story