வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jan 2017 10:30 PM GMT (Updated: 5 Jan 2017 8:41 PM GMT)

வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

ஸ்ரீரங்கம்,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று மாலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். சுவாமி தரிசனத்திற்கு பின் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர், ரெங்கவிலாஸ் மண்டபம், கருடமண்டபம், கொடிகம்பம், தாயார் சன்னதி ஆகிய இடங்களில் விழா ஏற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் ஆகியோர் விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கினர். அப்போது அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கோவில் அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Next Story