திருச்சி மண்டல அலுவலகத்திற்குள் புகுந்து ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி மண்டல அலுவலகத்திற்குள் புகுந்து ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 8:42 PM GMT)

திருச்சி மண்டல அலுவலகத்திற்குள் புகுந்து ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல அலுவலகத்திற்குள் புகுந்து நேற்று ஏ.ஐ.டி.யூ.சி. அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். டிசம்பர் மாத ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என கோரி நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் மணி, லட்சுமணன், திருச்சி மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது. வருகிற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ஓய்வூதியம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story