திருச்சியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


திருச்சியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 5 Jan 2017 8:42 PM GMT)

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருச்சி,

எந்தவித முன்னேற்பாடும் இன்றி, திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் காளஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் சுப.சோமு, சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாரிமுத்து, பெனட் அந்தோணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்கள். இதில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு, கோட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் சார்லஸ், சத்தியநாதன், வழக்கறிஞர் கோவிந்தராஜ், ராஜாநசீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நெ.1 ே-்டால்கேட் ரவுண்டானா அருகே மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டாரத் தலைவர் முருகேசன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story