தஞ்சை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 26 பக்தர்கள் படுகாயம்


தஞ்சை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 26 பக்தர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:15 PM GMT (Updated: 5 Jan 2017 8:44 PM GMT)

தஞ்சை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 26 பக்தர்கள் படுகாயம்

தஞ்சாவூர்,


தஞ்சை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 26 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

பஸ் கவிழ்ந்தது


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற பக்தர்கள் ஒரு தனியார் பஸ்சில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மன்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து அவர்கள் ராசிபுரம் செல்வதற்காக புறப்பட்டு சென்றனர். பஸ் தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

26 பேர் படுகாயம்


இதில் பஸ்சில் பயணம் செய்த 21 பெண்கள், 4 ஆண்கள், 1 சிறுவன் என மொத்தம் 26 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story