தஞ்சையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 5 Jan 2017 8:45 PM GMT)

தஞ்சையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,


கும்பகோணம், நாகை மண்டல அரசு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கரந்தையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச்செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர் கருணாநிதி, நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சுந்தரம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு டிசம்பர் மாதத்துக்கான ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டிப்பது. அரசு அறிவித்துள்ள 7 சதவீத அகவிலைப்படியை இணைத்து வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய கிராஜூவிட்டி, விடுப்பு ஊதியம் போன்ற நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story