மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 5 Jan 2017 9:21 PM GMT (Updated: 5 Jan 2017 9:21 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தை அடுத்த கல்மேடு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தை அடுத்த கல்மேடு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சீழ்லோடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது28) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை செங்கல் சூளையில் கழிப்பிடம் இருந்த பகுதிக்கு ஏழுமலை சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை எதிர்பாராதவிதமாக ஏழுமலை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். ஏழுமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story