வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் சித்தி குடும்பத்தினரை வீட்டுக்குள் தாழ்பாள் போட்டு தீவைப்பு


வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் சித்தி குடும்பத்தினரை வீட்டுக்குள் தாழ்பாள் போட்டு தீவைப்பு
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 3 Feb 2017 6:35 PM GMT)

வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் சித்தி கும்பத்தினரை வீட்டுக்குள் தள்ளி தாழ்பாள் போட்டு தீவைத்த தொழிலாளியை போலீசார் வலைவீசு தேடிவருகின்றனர்.

வேளாங்கண்ணி,

முன்விரோதம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடக்கு பொய்கை நல்லூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மனைவி சகுந்தலா (வயது 38). இவரது அக்கா மகனான அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராமன். கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சகுந்தலாவின் அண்ணனும், தனது மாமாவுமான கோலாட்டி ரவியை முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் செல்வராமனை கைது செய்து சிறையில் அடைந்தனர். இதனால் சகுந்தலா குடும்பத்திற்கும், செல்வராமன் குடும்பத்துக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து செல்வராமன் வெளியே வந்தார்.

வீட்டுக்கு தீவைப்பு

இந்த நிலையில் செல்வராமன் சம்பவத்தன்று சகுந்தலாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உன்னையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதை தொடர்ந்து செல்வராமன், சகுந்தலா வீட்டுக்.கு சென்று தகராறு செய்தார். அப்போது சகுந்தலா குடும்பத்தினரை வீட்டிக்குள் தள்ளி கதவையை தாழ்பாள் போட்டு, தான் கொண்டு வந்த மண்எண்ணெய்யை வீட்டின் மீது ஊற்றி தீவைத்தது விட்டு செல்வராமன் தப்பி ஓடிவிட்டார். சகுந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றினர். இது குறித்து சகுந்தலா கொடுத்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு தப்பிசூயோடிய செல்வரமானை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story