கடையத்தில் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து


கடையத்தில் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து
x
தினத்தந்தி 3 Feb 2017 8:00 PM GMT (Updated: 3 Feb 2017 7:17 PM GMT)

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து, கடையம் யூனியன் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கடையம்,

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து, கடையம் யூனியன் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

கடையம் யூனியனுக்கு உட்பட்ட தர்மபுரமடம் பஞ்சாயத்து அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரமடம் பஞ்சாயத்தில் நடந்த 100 நாள் வேலை திட்டத்தில் பல நாட்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், கட்டி முடித்து பல வருடங்களாக அழகப்பபுரத்தில் திறக்கப்படாத சுயஉதவிக்குழு கட்டிடத்தை திறக்க வேண்டும், ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடிக்கு பாதுகாப்பு கேட்டும் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடையம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அழகப்பபுரம் கிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு பிரிவு கடையம் ஒன்றிய செயலாளர் முத்துராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் 15 நாட்களில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story