ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி பெண் கைது


ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி பெண் கைது
x
தினத்தந்தி 3 Feb 2017 7:54 PM GMT (Updated: 3 Feb 2017 7:54 PM GMT)

சென்னை பாடி புதுநகரை சேர்ந்தவர் விஜயா (வயது 50). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

சென்னை,

சென்னை பாடி புதுநகரை சேர்ந்தவர் விஜயா (வயது 50). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த ராணி (35) என்பவர், ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் நான் மாதந்தோறும் பணம் கட்டி வந்தேன். என்னை போல மேலும் 15 பேரும் மாதந்தோறும் ஏலச்சீட்டு பணம் கட்டினர். ஆனால் ஏலச்சீட்டு முதிர்ச்சி அடைந்த பிறகும் எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ராணி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துவிட்டார். அவர் மீது உரியநடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகார் மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகுடீஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். மோசடி புகார் கூறப்பட்ட ராணி நேற்று கைது செய்யப்பட்டார். 

Next Story