இந்து முன்னணி முன்னாள் பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


இந்து முன்னணி முன்னாள் பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 3 Feb 2017 10:00 PM GMT (Updated: 3 Feb 2017 8:44 PM GMT)

சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி முன்னாள் பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கட்டிடவேலை செய்து வந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி மணிகண்டன் (வயது 29) உள்பட 4 பேரை இரும்புலிக்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயலில் ஈடுபட்ட மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜூவுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் கிரி பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.

 அதனை தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.


Next Story