பெருங்களத்தூர் அருகே பஸ் மோதி பள்ளி ஊழியர் சாவு


பெருங்களத்தூர் அருகே பஸ் மோதி பள்ளி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 3 Feb 2017 9:08 PM GMT (Updated: 3 Feb 2017 9:08 PM GMT)

பெருங்களத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தனியார் பள்ளி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தாம்பரம்,

பெருங்களத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தனியார் பள்ளி ஊழியர் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்தி தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் பள்ளி ஊழியர்

அண்ணாநகர், கதிரவன் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பாலா அருள் (வயது 36). இவர் தாம்பரத்தை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணினி பிரிவில் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக, அண்ணாநகரில் இருந்து மாம்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் அருகே
சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ் பாலாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

டிரைவர் கைது

இதில், பாலா மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த பாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் பாலாவின் உடலை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரான திருவண்ணாமலை வழுவூர் கிராமத்தை சேர்ந்த பாலா சுந்தரம் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story