கல்பாக்கம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை


கல்பாக்கம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Feb 2017 9:37 PM GMT (Updated: 3 Feb 2017 9:37 PM GMT)

கல்பாக்கம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

கல்பாக்கத்தை அடுத்த லத்தூர் ஒன்றியம் பெரியவெளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். விவசாயி. இவரது மனைவி சங்கீதா (வயது 26). திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. அருண்குமார் சரியாக வேலைக்கு செல்லாததால் அடிக்கடி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் வேதனையடைந்த சங்கீதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

 பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக  உயிரிழந்தார். இது குறித்து அணைக்கட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

திருப்பாச்சூர்

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் அதேபகுதியில் பெட்டிகடை நடத்தி வருகிறார். இவரது மனைவி குமாரி (55). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் குமாரிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத குமாரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 இது குறித்து சண்முகசுந்தரம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story