மணப்பாறை பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை


மணப்பாறை பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2017 9:45 PM GMT (Updated: 3 Feb 2017 9:41 PM GMT)

மணப்பாறை நகராட்சி ஆணையர் பாப்பம்மாள் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மணப்பாறை,

 மணப்பாறை நகராட்சி மக்களுக்கு, குளித்தலை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமலை சராசரி அளவை விட குறைவான அளவே பெய்துள்ள காரணத்தினால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பாற்றாக்குறை நிலவும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக மணப்பாறை நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து விடுவிக்கப்படும் காவிரி குடிநீர் குறைவாக பெறப்படுகிறது.

 எனவே பொதுமக்கள் நகராட்சி வழங்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். குடிநீர் குழாழ்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவ்வகுடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story