தூத்துக்குடியில், விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்


தூத்துக்குடியில், விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 8 March 2017 8:00 PM GMT (Updated: 8 March 2017 2:29 PM GMT)

ராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ உள்ளிட்ட மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

தூத்துக்குடி,

ராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ உள்ளிட்ட மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த மீனவர் பிரிட்ஜோ பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து மீனவர்கள், அவருடைய உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 250 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைந்தது. நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்.


Next Story