மகளிர் தினத்தையொட்டி பாபநாசத்தில் மினி மாரத்தான் போட்டி


மகளிர் தினத்தையொட்டி பாபநாசத்தில் மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 8 March 2017 8:30 PM GMT (Updated: 8 March 2017 2:52 PM GMT)

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பாபநாசத்தில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விக்கிரமசிங்கபுரம்,

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பாபநாசத்தில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மினி மாரத்தான் போட்டி

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தவத்திரு குன்றக்குடி அடிகளார் விளையாட்டு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டி பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் பொது பிரிவுக்கு நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்பட்டது. போட்டியை விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அழகப்பன் தலைமை தாங்கினார். வள்ளிமயில் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வேம்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

பரிசு–சான்றிதழ்

மாணவர்கள் பிரிவில் வீரவநல்லூர் புனித ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவன் ரூபன் டேனியல் முதலிடமும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவன் ராஜப்பெருமாள் 2–வது இடமும், வீரவநல்லூர் கல்லூரி மாணவன் தம்பான் 3–வது இடமும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவன் செல்வகுமார் 4–வது இடமும் பிடித்தனர்.

மாணவிகள் பிரிவில் நெல்லை ஸ்போர்ட்ஸ் அகாடமியை முத்துமாரி முதலிடமும், வீரவநல்லூர் புனித ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவி ரம்யா 2–வது இடமும், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி சங்கீதா 3–வது இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில், உடற்கல்வித்துறை பேராசிரியர் பா.பழனிக்குமார் நன்றி கூறினார். இதில் கல்லூரி நிர்வாக இயக்குனர் நடராஜன், இயற்பியல் துறை பேராசிரியர் சுந்தரம், தமிழ்த்துறை தலைவர் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story