குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம்


குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-09T00:05:11+05:30)

திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் பேரூராட்சியில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பயோ–மைனிங் என்ற அறிவியல் முறையில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறத

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் பேரூராட்சியில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பயோ–மைனிங் என்ற அறிவியல் முறையில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அறிந்த புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், ஆலங்குடி, கறம்பக்குடி, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, கரூர் மாவட்டம் புஞ்சை புகளூர் ஆகிய பேரூராட்சிகளில் இருந்து 5 மேற்பார்வையாளர்கள் தலைமையில் சுமார் 40 பேர் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு வந்தனர். அவர்கள் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படும் பேரூராட்சியின் வளாகப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அவர்களுக்கு ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படும் முறை பற்றி விளக்கி கூறினார்.


Next Story