பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து திருச்சியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து திருச்சியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 8 March 2017 6:35 PM GMT)

திருச்சி மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பாலக்கரை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய மாணவர் அணி இணை செயலாளர் மகேஸ்வரி வையாபுரி தலைமை தாங்கினார். புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் ராஜராஜன் முன்னில

திருச்சி,

திருச்சி மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பாலக்கரை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய மாணவர் அணி இணை செயலாளர் மகேஸ்வரி வையாபுரி தலைமை தாங்கினார். புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ராஜசேகரன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார்.

பெண்கள் மீதான வன்முறையை கண்டித்தும், பாதுகாப்பு கருதி பெண்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும், முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும், வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பெண்கள் சுயதொழில் தொடங்க நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோ‌ஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுசெயலாளர் ஹேமநாதன், மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாநில செயலாளர் வையாபுரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோ‌ஷங்களை எழுப்பினர்.


Next Story