குறிப்பேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றால் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயிலுக்கு செல்வார்கள்


குறிப்பேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றால் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயிலுக்கு செல்வார்கள்
x
தினத்தந்தி 8 March 2017 9:04 PM GMT (Updated: 8 March 2017 9:03 PM GMT)

குறிப்பேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றால் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயிலுக்கு செல்வார்கள் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

குறிப்பேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றால் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயிலுக்கு செல்வார்கள் என்று எடியூரப்பா கூறினார்.

ஜெயிலுக்கு செல்வார்கள்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஜெயப்பிரகாஷ் ஹெக்டே பெங்களூரு மல்லேஸ்வரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடியை வழங்கி எடியூரப்பா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியதாவது:–

காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் கொடுத்த விவரங்கள் குறிப்பேட்டில் உள்ளன. இது பகிரங்கமானது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றால் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயிலுக்கு செல்வார்கள். நான் தொடக்கத்தில் குறிப்பேடு பற்றி பேசும்போது, இதை காங்கிரஸ் தலைவர்கள் என்னை தாக்கி பேசினார். அந்த குறிப்பேடு தொலைக்காட்சிகளில் வெளியானபோது காங்கிரஸ் தலைவர்கள் வாயை மூடிக்கொண்டனர்.

கதவுகள் திறந்தே இருக்கிறது

மேலும் எங்கள் கட்சி தலைவர்களின் பெயர்கள் அடங்கிய போலி குறிப்பேட்டை காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத் பா.ஜனதாவில் சேர்ந்த நேரம் நல்ல நேரம் ஆகும். அவருக்கு பிறகு அந்த கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகி எங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.

குமார் பங்காரப்பா உள்ளிட்ட இன்னும் சில தலைவர்கள் எங்கள் கட்சியில் சேர உள்ளனர். எங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று வருபவர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கிறது. அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் ஆசையோ அல்லது வேறு எந்த ஆசையோ காட்டவில்லை.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.


Next Story