தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி சிறையில் அடைப்பு


தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 March 2017 10:00 PM GMT (Updated: 8 March 2017 9:05 PM GMT)

சின்னசேலம் அருகே தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி சிறையில் அடைப்பு

விழுப்புரம்,

சின்னசேலம் அருகே பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 54), சாராய வியாபாரி. இவர் மீது சாராயம் கடத்தியதாகவும், காய்ச்சிவிற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும் இவர் தொடர்ந்து சாராய கடத்தல், விற்பனை செய்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். எனவே இவரின் இத்தகைய செயல்களை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் பரிந்துரை செய்தார்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து சேகரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரைப்படி சாராய வியாபாரி சேகரை சின்னசேலம் போலீசார், தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story