தாறுமாறாக ஓடிய பஸ், சுவரில் மோதி விபத்து


தாறுமாறாக ஓடிய பஸ், சுவரில் மோதி விபத்து
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:07 PM GMT)

தாறுமாறாக ஓடிய பஸ், சுவரில் மோதி விபத்து

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட ஒரு அரசு பஸ் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் இடலாக்குடி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் ரோட்டோரம் இருந்த வளாக சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. மேலும் முன்புற கண்ணாடியும் உடைந்து சிதறின. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

அதைத் தொடர்ந்து பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பஸ் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 

Next Story