கொத்தவல்லி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


கொத்தவல்லி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 8 March 2017 10:30 PM GMT (Updated: 8 March 2017 9:08 PM GMT)

மன்னார்குடி அருகே கொத்தவல்லி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

மன்னார்குடி,

மன்னார்குடியை அடுத்துள்ள மூவாநல்லூரில் கொத்தவல்லி அய்யனார் மற்றும் கனகாம்பாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினரால் முடிவுசெய்யப்பட்டு திருப்பணி வேலை நடைபெற்று வந்தது. திருப்பணி நிறைவடைந்து கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 6-ந்தேதி யாக சாலை பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சங்கீதா ஜெயகாந்தன் தலைமையில் வேதவிற்பன்னர்கள் புனித நீர் அடங்கிய கடம் கொண்டுவந்தனர். அதனைதொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மனைவி மகேஸ்வரி காமராஜ், அ.தி.முக. முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கா.தமிழ்செல்வம், மன்னார்குடி அரசு கூடுதல் வக்கீல் ஜெயசங்கர் ,அ.தி,முக. மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகி அஜித்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Next Story