ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி உண்ணாவிரதம்


ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:10 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

புதுக்கோட்டை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மங்களை கண்டு பிடிக்க, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறையால் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ. விசாரித்து உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதன்படி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகில் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முத்தையன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சந்தானம் முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் எம்.ஆர்.திருப்பதி, ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளர் அம்பலவாணன், முன்னாள் திருமயம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், திருமயம் முத்துராமன், வக்கீல்கள் ராஜேந்திரன், முத்துகுமரன், ரவிசந்திரன், இளங்கோவன் மற்றும் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலை

இதேபோல விராலிமலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story