மின்வேலியில் சிக்கி காலில் காயம்: ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதும் பிளஸ்–2 மாணவர்


மின்வேலியில் சிக்கி காலில் காயம்: ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதும் பிளஸ்–2 மாணவர்
x
தினத்தந்தி 8 March 2017 9:53 PM GMT (Updated: 8 March 2017 9:53 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் மல்லையப்பா.

ஓசூர்.

இவரது மகன் முரளி (வயது 17). இவர் சூளகிரி அருகே உள்ள பிள்ளைகொத்தூரில் தனது தாய்மாமா வெங்கடேஷ் என்பவரின் வீட்டில் தங்கி ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று முரளி, அவரது அண்ணன் நாகராஜூடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி நாகராஜ், முரளி 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் நாகராஜ் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். முரளிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி தொடங்கிய பிளஸ்–2 தேர்வை எழுத மாணவர் முரளி விரும்பினார். இதற்காக ஆம்புலன்ஸ் மூலமாக ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி வருகிறார். தமிழ் முதல், 2–ம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் 2–ம் தாளை முரளி எழுதி உள்ளார்.


Next Story