ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது


ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2017 9:54 PM GMT (Updated: 8 March 2017 9:53 PM GMT)

ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வசாய்,

ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம்

பால்கர் மாவட்டம் பொய்சரில் உள்ள மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் மேலும் ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்காக திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அனுமதிகேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி அசோக் தேஷ்பாண்டே மற்றும் அச்யுத் நான்வடே ஆகியோர் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனில் தங்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டு உள்ளனர்.

அதிகாரிகள் கைது

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிற்சாலை உரிமையாளர் பணத்துடன் வருவதாக அவர்களிடம் கூறிவிட்டு, நேராக தானே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த யோசனையின்படி தொழிற்சாலை உரிமையாளர் நேற்றுமுன்தினம் அதிகாரிகள் இருவரையும் அலுவலகத்தில் சந்தித்து பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரிகள் அசோக் தேஷ்பாண்டே, அச்யுத் நான்வடே ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


Next Story