புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகளை இ–சேவை மையம் மூலம் வழங்க ஏற்பாடு


புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகளை இ–சேவை மையம் மூலம் வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 8 March 2017 9:57 PM GMT (Updated: 8 March 2017 9:56 PM GMT)

புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகளை இ–சேவை மையம் மூலம் அச்சடித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

சேலம்,

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

இந்த ஆண்டு சிறப்பு முறையிலான சுருக்குமுறை திருத்தத்தின் போது பெயர் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இ–சேவை மையத்தின் மூலம் அச்சடித்து வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதியதாக வாக்ககாளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு கடவுச்சொல் அவர்களுடைய செல்போனுக்கு மின்னஞ்சல் செய்தியாக தேர்தல் துறையால் அனுப்பப்பட்டு வருகிறது.

எனவே, வாக்ககாளர்கள் அந்த கடவுச்சொல்லை தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ–சேவை மையத்தில் காண்பித்து இலவசமாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

கடவுச்சொல்

கடவுச்சொல் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் தேர்தல் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1950–க்கு தொடர்பு கொண்டு கடவுச்சொல்லினை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அவர்கள் அரசு இ–சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

அடையாள அட்டை பெறுவதற்காக செல்லும் வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு ஆதாரத்தினை எடுத்துச்செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story