குடிபோதையில் தகராறு செய்த மகன் அடித்துக்கொலை முதியவர் வெறிச்செயல்


குடிபோதையில் தகராறு செய்த மகன் அடித்துக்கொலை முதியவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 8 March 2017 10:43 PM GMT (Updated: 8 March 2017 10:42 PM GMT)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(வயது 80).

சாத்தூர்,

 இவரது மகன் ராதாகிருஷ்ணன் (55). இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவரை வீட்டில் இருந்து விலக்கி வைத்துவிட்டனர். இதைதொடர்ந்து எந்தநேரமும் மது அருந்திவிட்டு போதையில் சுற்றித்திரிந்து உள்ளார்.

இந்தநிலையில் மதுபோதையில் நேற்று அவர் வீட்டுக்கு வந்தார். அங்கு இருந்த தனது தந்தை சுந்தர்ராஜிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜ், அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து தனது மகனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Next Story