கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக நீண்ட நேரம் லாரிகள் நிறுத்திவைப்பு


கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக நீண்ட நேரம் லாரிகள் நிறுத்திவைப்பு
x
தினத்தந்தி 2 April 2017 10:30 PM GMT (Updated: 2 April 2017 4:35 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து கொத்தமல்லி, புதினா பாரம் ஏற்றிய இரண்டு லாரிகள் சென்னை கோயம்பேடு

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து கொத்தமல்லி, புதினா பாரம் ஏற்றிய இரண்டு லாரிகள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரிகள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது அதில் அதிக பாரம் ஏற்றி வந்ததால் கூடுதலாக ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் எனக்கூறி நீண்டநேரம் லாரியின் டிரைவர்களை சுங்கச்சாவடி பணியாளர்கள் நிறுத்தி வைத்ததாக தெரிகிறது. அப்போது லாரி டிரைவர்களுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story