ஜொலிக்கும் ‘குப்பை கடற்கரை’


ஜொலிக்கும் ‘குப்பை கடற்கரை’
x
தினத்தந்தி 6 April 2017 9:30 PM GMT (Updated: 6 April 2017 10:06 AM GMT)

கண்ணாடி குப்பைகளையும், மருந்து பாட்டில் குப்பைகளையும் கொண்டு, அழகிய கண்ணாடி கடற்கரையை உருவாக்கியிருக்கிறார்கள், ரஷிய விஞ்ஞானிகள்.

ண்ணாடி குப்பைகளையும், மருந்து பாட்டில் குப்பைகளையும் கொண்டு, அழகிய கண்ணாடி கடற்கரையை உருவாக்கியிருக்கிறார்கள், ரஷிய விஞ்ஞானிகள். மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு புகழ்பெற்ற ரஷியாவில் கண்ணாடி குப்பைகளுக்கு பஞ்சமே இருக்காது. இருப்பினும் கண்ணாடி குப்பைகளைக் கொண்டும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள். ரஷியாவின் உசிரி என்ற கடற்கரையில் கண்ணாடி சிதறல்களை கொட்டி, சில பல கெமிக்கல்களின் உதவியுடன் கண்ணாடியை கூழாங்கற்களாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் உடைந்து சிதறிய கண்ணாடி குப்பைகள் ஜொலிக்கும் கூழாங்கற்களாக காட்சியளிக்கின்றன.

# ‘முதல் இனம் தமிழ் இனம்’ என்றாலும், உலகநாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது...!

Next Story