நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி 700 பேர் பங்கேற்பு


நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி 700 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 1:52 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற தடகள போட்டிகளும், கபடி, கோ–கோ, கைப்பந்து, எறிபந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


Next Story