சிறுபான்மையினருக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் மாநாட்டில் வலியுறுத்தல்


சிறுபான்மையினருக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 8:32 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்,

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு 2-வது மாவட்ட மாநாடு திருவாரூரில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில அமைப்பாளர் நூர்முகமது, மாநில துணை அமைப்பாளர் லெட்சுமணன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்ட துணை அமைப்பாளர் அக்பர்தீன் வரவேற்றார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத நல்லிணக்க கமிட்டி

திருவாரூர் மாவட்டத்தில் மும்மத தலங்கள் அமைந்துள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக சுற்றுலா மினி பஸ்களை இயக்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் மத நல்லிணக்க கமிட்டியை நிரந்தரமாக அமைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story