கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு 17-ந்தேதி காத்திருப்பு போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு 17-ந்தேதி காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2017 8:36 PM GMT (Updated: 6 April 2017 8:35 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு வருகிற 17-ந்தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது என்று விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோட்டூர்,

கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சிவசண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் நேதாஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். இதில் சங்க மாவட்ட தலைவர் வீராச்சாமி பேசினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய துணைத்தலைவர் தேவதாஸ், மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனே நிவாரண தொகை வழங்க வேண்டும். கடந்த 6 மாத காலமாக கோட்டூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை. எனவே சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு வருகிற 17-ந்தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதில் கோட்டூர் ஒன்றியத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கு பெறுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story