பெரம்பலூர், அரியலூரில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர், அரியலூரில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 8:51 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் பெரம்பலூர் துறைமங்கலம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று சங்கு ஊதியும், சாவு மணி அடித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட இணை செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்குவதை அரசு கைவிட வேண்டும், சாலை பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவதை நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் மகாதேவன் நன்றி கூறினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பணிநீக்க காலத்தில் உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் 50-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story