2 ஆயிரம் பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி; 5 பேர் கைது


2 ஆயிரம் பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி; 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2017 8:54 PM GMT (Updated: 6 April 2017 8:54 PM GMT)

நண்பர்கள் கிளப்பில் உறுப்பினர்களாக சேருங்கள் என கூறி, 2 ஆயிரம் பேரிடம் ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

நண்பர்கள் கிளப்பில் உறுப்பினர்களாக சேருங்கள் என கூறி, 2 ஆயிரம் பேரிடம் ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறுந்தகவல் அனுப்பி மோசடி

மும்பையில் ஒரு கும்பல் பொதுமக்களின் செல்போனுக்கு ‘பிடித்த ஆண், பெண்ணுடன் இலவசமாக உல்லாசம் அனுபவிக்க எங்கள் நண்பர்கள் கிளப்பில் உறுப்பினராக சேருங்கள்’ என்று குறுந்தகவல் அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்தது. இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் அந்த கும்பலை பிடிக்க சைபர் கிரைம் துணை போலீஸ் கமி‌ஷனர், போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் மோசடி கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தங்களது நண்பர்கள் கிளப்பில் என்னை உறுப்பினராக சேர்த்தால் தங்க நாணயம் தருவதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறினர். இதைநம்பிய மோசடி கும்பலை சேர்ந்த ஒருவர், நேற்று முன்தினம் மும்பா தேவி பகுதிக்கு வந்தார். அவரை அங்கு ஏற்கனவே தயாராக நின்ற போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

5 பேர் கைது

அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த கும்பல் மஜித் பந்தர் பகுதியில் போலி கால்சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மோசடிக்கு பயன்படுத்திய கணினி, 37 செல்போன்கள், ஹார்டு டிஸ்க், ஆபாச படங்கள் மற்றும் கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டு வந்த முகமது ‌ஷகிப்(வயது24), கிரிஸ் ஜெஸ்வால்(33), கமல்(31), அர்ஜூன்(28), ஷெரிப்(24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், இந்த கும்பல் மும்பையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேரிடம் ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.


Next Story