லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம்


லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 9:05 PM GMT)

லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம்

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டையில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு தலைவராக ராமதாஸ், துணைத் தலைவராக சேகர், செயலாளராக செல்வ கணபதி, பொருளாளராக நேதாஜி, உறுப்பினராக கமலக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை இந்து அறநிலையத்துறையின் ஆணையர் தில்லைவேல் பிறப்பித்துள்ளார்.

புதிதாக தேர்வு செய்யப் பட்டுள்ள அறங்காவலர் குழுவினருக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு புதிய அறங்காவலர் குழுவினருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story