டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 April 2017 10:33 PM GMT (Updated: 6 April 2017 10:33 PM GMT)

அம்பத்தூர் எஸ்டேட் முதல் தெருவில் சாலை ஓரம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.

ஆவடி,

அம்பத்தூர் எஸ்டேட் முதல் தெருவில் சாலை ஓரம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் நேற்று மதியம் 2.30 மணியளவில் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து ஆயில் வெளியே சிதறி கீழே இருந்த குப்பைகள் மற்றும் மின்சார பெட்டி ஆகியவற்றில் கொட்டியதால் அவைகளும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு நிலைய வீரர்கள், டிரான்ஸ்பார்மர் மற்றும் குப்பையில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள், புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைத்து சரிசெய்தனர். அதன்பிறகு அந்த பகுதியில் மின்சாரம் வினியோகம் சீரானது.


Next Story