இன்று முதல் 13–ந் தேதி வரை ரே‌ஷன் கார்டில் செல்போன் எண்ணை சேர்க்க சிறப்பு முகாம்

இன்று முதல் 13–ந் தேதி வரை ரே‌ஷன் கார்டில் செல்போன் எண்ணை சேர்க்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 7 April 2017 8:00 PM GMT (Updated: 7 April 2017 1:28 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ரே‌ஷன் கார்டுகளுக்கு பதிலாக, மின்னணு குடும்ப அட்டை எனப்படும் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படுகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ரே‌ஷன் கார்டுகளுக்கு பதிலாக, மின்னணு குடும்ப அட்டை எனப்படும் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது 86 சதவீதம் பேர் மட்டுமே தங்களது செல்போன் எண்களை ரே‌ஷன் கார்டில் பதிவு செய்து உள்ளனர். தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு செல்போன் எண் அவசியம் ஆகும். பொது மக்களுக்கு அவர்களது ஸ்மார்ட் கார்டு தயாராகி விட்டது என்பதை செல்போன் எண் மூலம் தான் தெரிவிக்கப்படுகிறது.

எனவே ரே‌ஷன் கார்டு தாரர்களிடம் இருந்து செல்போன் எண்களை சேகரிக்கும் சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) முதல் 13–ந் தேதி வரை நடைபெறுகிறது. எனவே செல்போன் எண்ணை பதிவு செய்யாத ரே‌ஷன் கார்டுதாரர்கள் சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைகளுக்கு சென்று தங்களது செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டும்.

இதுதவிர செல்போன் எண்கள், 7, 8 மற்றும் 9 என தொடங்கும் எண்களாக இருக்க வேண்டும். பிற எண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய முடியாது.

இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.

Next Story