தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று பொது வினியோக திட்ட மனு நீதிநாள் முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் ரவிகுமார் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று பொது வினியோக திட்ட மனு நீதிநாள் முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் ரவிகுமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 April 2017 8:00 PM GMT (Updated: 7 April 2017 1:47 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட மனுநீதி நாள் முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் ரவிகுமார் அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பொதுவினியோக திட்ட மனுநீதி நாள் முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் ரவிகுமார் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது;–

மனுநீதி நாள் முகாம்

பொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் மனுநீதி நாள் முகாம் ஒவ்வொரு மாதமும் 2–வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இந்தமனுநீதி நாள் முகாமில், பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரியப்படுத்தலாம். இந்த மாதத்துக்கான மனுநீதி நாள் முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்க உள்ளது. முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

எங்கெங்கு நடக்கிறது?

தூத்துக்குடி தாலுகாவில் கூட்டுடன்காடு கிராமத்தில் நடக்கும் முகாமிற்கு தூத்துக்குடி உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆழிகுடி கிராமத்தில் நடக்கும் முகாமிற்கு தூத்துக்குடி பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளரும், திருச்செந்தூர் தாலுகா திருநாவீருடையார்புரம் கிராமத்தில் நடக்கும் முகாமிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகா பெரியதாழை கிராமத்தில் நடக்கும் முகாமிற்கு தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (முத்திரை), கோவில்பட்டி தாலுகா ஆலம்பட்டி கிராமத்தில் நடக்கும் முகாமிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகா ஆ.மீனாட்சிபுரம் கிராமத்தில் நடக்கும் முகாமிற்கு தூத்துக்குடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளரும், விளாத்திகுளம் தாலுகா ராமச்சந்திராபுரத்தில் நடக்கும் முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகா மேலகரந்தையில் நடக்கும் முகாமிற்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

ரே‌ஷன் கார்டில்...

இந்த முகாமில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பொது மக்கள் ரே‌ஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல், முகவரி மாற்றம், ஒப்புவிப்பு சான்று கோரும் மனுக்களை கொடுக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story