பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் மன அழுத்த நோய் விழிப்புணர்வு ஊர்வலம்


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் மன அழுத்த நோய் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 7 April 2017 8:15 PM GMT (Updated: 7 April 2017 2:17 PM GMT)

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில், மன அழுத்த நோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில், மன அழுத்த நோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பானு கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் 4 ரத வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் நிறைவு அடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் மகிழ்வுடன் வாழ மன அழுத்தத்தை தவிர்த்திடு, நம்பிக்கையின்மையை தவிர்த்திடு, மன அழுத்தம் நமக்கு எதிரி, நல்ல ஆரோக்கியமான மன நலமே நல்ல வாழ்வின் அடையாளம், மனதை தெளிவாக்கு, மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியை உருவாக்கு, கவலைகள்– குழப்பங்களை வாழ்க்கையில் தவிர்த்திடு, அதிகமான கோபமும், சோகமும் மனநோயின் அறிகுறி, மனநோயாளியை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை, மனநலம்– குடும்ப நலம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோ‌ஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி, அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story