6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் முதியவர் கைது


6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் முதியவர் கைது
x
தினத்தந்தி 2 May 2017 11:15 PM GMT (Updated: 2 May 2017 9:26 PM GMT)

பேளுக்குறிச்சி அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஒரு தம்பதியரின் 6 வயது மகள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தாள். திடீரென அந்த சிறுமியை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறியடித்தபடி அக்கம், பக்கம் தேடினர். அப்போது அங்குள்ள ஒரு சந்தில் சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று பார்த்தனர். சிறுமியின் அருகில் பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் (வயது 70) நின்று கொண்டிருந்தார். சிறுமியிடம் கேட்டதில், முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

முதியவர் கைது

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், கணேசனை பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

Related Tags :
Next Story