பாளையங்கோட்டையில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 7:30 PM GMT (Updated: 3 May 2017 1:58 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நெல்லை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகள் குறித்து எழுதப்பட்டு இருந்த அட்டைகளை அவர்கள் கழுத்தில் அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் பத்மராஜ் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கோரிக்கைகள்

கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். 3 மாத சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க பொருளாளர் சிவகுமார், செயலாளர் பெனடிட்ராஜா, மகளிர் அணி செயலாளர் சிவா, தணிக்கையாளர் துர்க்கா பரமேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story