நாங்குநேரி அருகே ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை


நாங்குநேரி அருகே ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2017 7:30 PM GMT (Updated: 3 May 2017 3:22 PM GMT)

நாங்குநேரி அருகே ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

நாங்குநேரி,

நாங்குநேரி அருகே ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர் பிணம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளம் இடையே நாங்குநேரி– திசையன்விளை ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாலிடெக்னிக் மாணவர்

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள ஏறாந்தையை சேர்ந்த பாஸ்கர் மகன் சூர்யா (வயது 19) என்பதும், அவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

சூர்யாவை அவரது தந்தை பாஸ்கர் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சூர்யா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story