குளுந்தாளம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


குளுந்தாளம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 9:09 PM GMT)

புள்ளம்பாடி குளுந்தாளம்மன் கோவிலில் நேற்று சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் புள்ளம்பாடி அண்ணாநகர், காமராஜர் நகர், தைலாகுளம் உதயநகர், வெங்கடாஜலபுரம், வெள்ளனூர், பு.சங்கேந்தி, வ.கூடலூர், கல்லக்குடி, கோவண்டாகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோரும், அன்னதானமும் வழங்கப்பட்டன. லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிட்ரிக் மேனுவல், இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, தக்கார் முத்துராமன் மற்றும் காரியக்காரர்கள், திருப்பணி குழுவினர், கிராமமக்கள் செய்திருந்தனர்.

தங்க பல்லக்கில் வீதியுலா

இன்று(வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில் சாமி தங்கபல்லக்கில் வீதியுலாவும், நாளை(வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள்(சனிக் கிழமை) அம்மன் குடிபுகுதல் நிகழ்வும் நடைபெறுகின்றன. 

Related Tags :
Next Story