ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2017 10:15 PM GMT (Updated: 30 May 2017 7:14 PM GMT)

ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிகிரீசன், வினோத் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மதுரையை சேர்ந்த கண்ணன் (30) என்பவருக்கும் கஞ்சா கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தேனி,ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தி வருவதும், இங்கு இருந்து கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் தேனி புறவழிச்சாலை வழியாக ஒரு காரில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக தேனி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் புறவழிச்சாலையில் தனியார் பள்ளி அருகில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரின் பின்பகுதியில், 5 மூட்டைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ரூ.10 லட்சம் மதிப்பு ஒவ்வொரு மூட்டையிலும் தலா 20 கிலோ வீதம் மொத்தம் 100 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து காரையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த சபரிகிரீசன் (வயது 33), அய்யர்பங்களாவை சேர்ந்த வினோத் (22) என்பது தெரியவந்தது.இதில் சபரிகிரீசன், காரின் உரிமையாளர் ஆவார். வினோத் கார் டிரைவர். இவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும், தேனி வழியாக கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.2 பேர் கைது


Next Story