தாலுகா அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை


தாலுகா அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 30 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-31T03:31:58+05:30)

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி தாலுகாவில் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிக்கூடங்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.

அரசு விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிக்கூடங்கள் மீதும், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் மாற்றுச்சான்றிதழ் வழங்க பணம் வசூலித்ததை மாணவர்களிடம் திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.

கோரிக்கை மனு

மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், தினேஷ்குமார், ஆறுமுக கனி, மாதர் சங்க தலைவி விஜயலட்சுமி, செயலாளர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ஜான்சன் தேவசகாயத்திடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story