நெல்லை மாநகரில் நாளை மின்சாரம் நிறுத்தம்


நெல்லை மாநகரில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Jun 2017 7:30 PM GMT (Updated: 15 Jun 2017 1:55 PM GMT)

நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நெல்லை,

நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரவாரிய நெல்லை நகர்ப்புற வினியோக செயற்பொறியாளர் ஐசன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மின்சாரம் நிறுத்தம்

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதகளில் மின்சார வினியோகம் இருக்காது.

வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகர், ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், சமாதானபுரம், அசோக் திரையரங்க பகுதி, மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் ரோடு, பாளை. பஸ் நிலையம், மகாராஜ நகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்பு நகர், பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு, என்.ஜி.ஓ. காலனி, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம் புதுக்குளம், இட்டேரி, திருவனந்தபுரம் ரோடு, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு மற்றும் செய்துங்கநல்லூர்.

மேலப்பாளையம் பகுதிகளில்....

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம் ஆகிய பதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story