கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்


கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 2017-06-21T23:29:49+05:30)

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் எல்லையம்மன் கோவில் வளாகத்தில்  தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் சமூகதணிக்கை குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் முன்னிலை வகித்தார். இதில் 260–க்கும் மேற்பட்ட தேசிய ஊரக  வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் 2015–16 மற்றும் 2016–17–ம் ஆண்டுக்கான தணிக்கை ஆய்வு செய்த கணக்குகள் பற்றிய விளக்கங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேசிய ஊரக வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

Next Story