தவறி விழுந்து ஒடிசா மாநில தொழிலாளி சாவு


தவறி விழுந்து ஒடிசா மாநில தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 Jun 2017 9:45 PM GMT (Updated: 21 Jun 2017 6:04 PM GMT)

கம்பம்– குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் ஆலையில் ஒடிசா மாநிலம் பங்காதி பகுதியை சேர்ந்த ஜான் ஓரம் மகன் அசோக் ஓரம் (வயது 28) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கம்பம்,

கம்பம்– குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு பின்புறம் வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலம் பங்காதி பகுதியை சேர்ந்த ஜான் ஓரம் மகன் அசோக் ஓரம் (வயது 28) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் சிறுநீர் கழிப்பதற்காக சென்றதாக தெரிகிறது. அப்போது நிலை தடுமாறி அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி மீது அவர் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story