தென்இந்தியாவிலேயே வரி வசூலில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது சித்தராமையா தகவல்


தென்இந்தியாவிலேயே வரி வசூலில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது சித்தராமையா தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2017 8:30 PM GMT (Updated: 21 Jun 2017 7:41 PM GMT)

தென்இந்தியாவிலேயே வரி வசூலில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என்று சட்டசபையில் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

தென்இந்தியாவிலேயே வரி வசூலில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என்று சட்டசபையில் சித்தராமையா கூறினார்.

கிருஷ்ணா அணை நீர்மட்டத்தை...

கர்நாடக சட்டசபையில் நேற்று துறைகள் மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்–மந்திரி சித்தராமையா பதிலளித்து பேசியதாவது:–

கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.58 ஆயிரத்து 393 கோடி ஒதுக்கியுள்ளோம். இதில் ரூ.38 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம். நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செலவையும் சேர்த்தால், அது ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டிவிடும். கிருஷ்ணா அணை நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரூ.1 லட்சம் கோடி செலவு

இந்த திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என்று ஆரம்பத்தில் அதிகாரிகள் என்னிடம் கூறினர். ஆனால் இன்று அதற்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தை கையகப்படுத்த மட்டுமே ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. தேர்தலின்போது நாங்கள் சொன்னபடி நடந்து கொண்டுள்ளோம்.

மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். இதனால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.84 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். முந்தைய பா.ஜனதா ஆட்சி காலத்தில் இதற்கு ரூ.21 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

பசவண்ணரின் உருவப்படம்

மெட்ரோ ரெயில் நிலையம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடாவின் பெயர் சூட்டப்பட்டது. கெம்பேகவுடா ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. பசவண்ணரின் உருவ படம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். நான் பசவண்ணரின் கொள்கைகளை கடைபிடிப்பவன். தென்இந்தியாவிலேயே கர்நாடகம் தான் வரி வசூலில் முதல் இடத்தில் உள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story